How To Download Indian Driving Licence Tamilnadu

நம்மில் எவ்வளவு நபர்கள் நமக்கான ஓட்டுனர் உரிமம் அதாவது Driving Licence என்பதை பிரஸ் காப்பியாக நகல் எடுத்து வைத்துக் கொள்ள விரும்புவோம். ஆனால் பெரும்பாலான நபர்கள் தங்களது ஓட்டுனர் உரிமத்திற்கான வீட்டிற்கு தபாலில் வந்த Driving Licence மட்டுமே கையில் வைத்திருப்பார்கள் ஏனென்றால் அவர்களுக்கு இணையதளத்தின் வாயிலாகவும் எடுக்கலாம் என்பதே தெரியாமல் இருக்கும்.

Driving Licence நகல் எடுப்பது இரண்டு முறைகளை நாம் கையாள முடியும். முதலாவது முறை உங்கள் வீட்டின் அருகாமையில் உள்ள ஏதாவது சேவை மையத்திற்கு சென்று உங்களது ஆதார் கார்டு மற்றும் உங்கள் ஓட்டுனர் உரிமத்திற்கான எண்களை அவர்களிடம் தந்தீர்கள் என்றால் 15 நிமிடத்திற்குள் உங்களுக்கு தேவையான நகலெடுத்து எடுக்கப்பட்டு தரப்படும். ஆனால் பொதுவாக ஒவ்வொரு சேவை மையத்திலும் இப்படிப்பட்ட சேவைகளை உங்களுக்கு செய்வதற்கு ஒரு குறைந்தபட்ச தொகை என்ற மதிப்பாய்வு விதிக்கப்பட்டிருக்கும். பெரும்பாலானவர்கள் இதை தேர்வு செய்வது எவ்வளவு நல்லது ஏனென்றால் இந்த செயல்பாட்டில் ஏதாவது தவறுகள் கூட நடக்கலாம் ஆகையால் தெளிவாக இதற்காகவே இருக்கின்ற நபர்கள் அதுவும் அரசாங்க ரீதியாக நியமிக்கப்பட்ட நபர்களால் நகல் எடுத்து தரப்படும் செயலானது நமக்கு பிரச்சினை எதுவும் வராதவாறு இருக்கும்.

இரண்டாவது முறை தற்போதைய சூழ்நிலையில் இணையதளம் என்பது பெரும்பாலான சாதாரண நபர்கள் கூட பயன்படுத்தும் வகையில் மாறிவிட்டது, இப்படிப்பட்ட சூழ்நிலையில் உங்கள் கையில் ஒரு ஸ்மார்ட்போன் அதாவது ஆண்ட்ராய்டு போன் இருந்தாலே போதும் நீங்கள் இணையதளத்தின் வாயிலாக நீங்களே உங்களது Driving Licence பெற்றுக்கொள்ளலாம்.

இதற்காகவே இணையதளங்கள் இருக்கின்றன அதை பயன்படுத்துவதற்காக அந்த இணைய தளத்திற்கான லிங்க் இல் உள்ள பொத்தானில் கொடுக்கப்பட்டுள்ளது அதை அழுத்தி நீங்கள் அந்த இணைய தளத்திற்கு செல்லலாம், பின்னர் அங்கு உங்களது பிறந்த தேதிகள் மற்றும் உங்கள் ஓட்டுனர் உரிமத்திற்கான எண் ஆதார் கார்டு சம்பந்தப்பட்ட தெளிவா ஆய்வுகள் செய்யப்பட்டு பின்னர் உங்களது ஓட்டுநர் உரிமம் ஆனது நகலெடுத்து டவுன்லோட் செய்யும் வகையில் தரப்படும். ஒருவேளை இதில் ஏதாவது பிரச்சினைகள் உங்களுக்கு ஏற்பட்டால் நீங்கள் அருகாமையில் உள்ள இ-சேவை மையத்தை அணுகி உங்களது ஓட்டுனர் உரிமத்தை பெற்றுக் கொள்வது எவ்வளவு நல்லது.

இ-சேவை மையம் என்பது ஒரு அரசாங்க ரீதியாக நடத்தப்பட்டு வருகின்ற சேவையாகும் அங்கு உங்கள் ஆதார் கார்டு முதல் அனைத்துவிதமான அரசாங்க சான்றிதழ்களையும் சரிபார்த்தல் மற்றும் பெற்றுக்கொள்ளுதல் எல்லா சேவைகளும் கொடுக்கப்படும் தற்போதைய சூழ்நிலையில் நகரவாசிகள் இ-சேவை மையத்தை பயன்படுத்துவது வெகுவாக குறைந்துவிட்டது ஏன் என்றால் ஸ்மார்ட்போன் என்பது அவர்களது கையில் நடமாடிக் கொண்டிருப்பது காரணம் ஆனால் கிராமப்புறங்களில் பெரும்பாலானவர்கள் இந்த மையங்களை சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

ஆகையால் உங்களிடம் இரண்டு வழிகள் உள்ளது ஒன்று இணையதளத்தின் வாயிலாக சென்று உங்களது சான்றிதழ் நகல் எடுத்துக் கொள்ளுதல் மற்றொன்று இ சேவை மையத்தின் மூலம் உங்களது சான்றிதழ் நகல் எடுத்துக் கொள்ளுதல்.

 

ணையதளத்திற்கு செல்ல கீழே உள்ள பொத்தானை அழுத்துங்கள்

v

Admin

My Website Motivation is Easy to Understand, Tech in Tamil, and Get Latest Tech Updates in Tamil, We Do Tips and also Innovation, I Wanted Each And Every Individual Whoever Is Interested In Technology To Be Able To Understand It In The Easiest Possible Way, Thanks.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *