How to remove background in our photo

பொதுவாக நம்மில் எவ்வளவு நபர்கள் புகைப்பட சம்பந்தப்பட்ட துறைகளில் வேலை பார்த்துக் கொண்டிருக்கலாம், அல்லது அடிக்கடி புகைப்படங்களுக்கு சம்பந்தப்பட்ட வேலையை செய்ய வேண்டிய சூழ்நிலை நமது தொழிலில் ஏற்படலாம், இப்படிப்பட்ட சூழ்நிலையில் நாம் பொதுவாக பயன்படுத்தப்படுகின்ற மென்பொருள் என்று எடுத்துக் கொண்டால் போட்டோஷாப் ஆகும்.

போட்டோஷாப் மென்பொருளில் இருக்கக்கூடிய மிகப்பெரிய பிரச்சனை என்னவென்றால் நம்மில் எவ்வளவு நபர்கள் கிட்டத்தட்ட நாலு மணி நேரத்திலிருந்து 5 மணி நேரம் ஒதுக்கி நமக்கு தேவைக்கு ஏற்றவாறு போட்டோக்களை எடிட் செய்து கொண்டிருப்போம். இந்த கட்டுரையின் நோக்கம் நீங்கள் அதிகபட்ச நேரத்தை முடிந்தவரைக்கும் குறைப்பது எப்படி என்பதுதான்,

பொதுவாக போட்டோஷாப் போன்ற மென்பொருளை பயன்படுத்தி நமது புகைப்படங்களை எடிட் செய்து கொண்டிருக்கும் போது அதிகபட்சமாக எந்த பகுதிக்கு நாம் நேரத்தை ஒதுக்குகிறோம் என்று பார்த்தாள், நமது போட்டோக்களை பயன்படுத்துவதற்காக பின்புறங்களில் இருக்கின்ற பொருள்களை முழுமையாக  எடிட் செய்து தேவையான இடத்தில் சரியாக பொருத்துவதற்கு நாம் அதிகபட்ச நேரத்தை ஒதுக்கி கிறோம் இதிலும், சரியான முறையில் இதை எடிட் செய்வது அவ்வளவு எளிதானது கிடையாது அவ்வப்போது சில பிரச்சினைகளும் ஏற்பட்டு விடும்.

ஆகையால் நமது புகைப்படத்தின் பின்புற பகுதிகளை உடனுக்குடன் அதாவது ஒரு நொடிப்பொழுதில் முழுமையாக அகற்றி நம்மிடம் தரக்கூடிய ஒரு இணையதளம் அல்லது ஒரு செயல்பாட்டுத் தளமாக இருந்தால் எப்படி இருக்கும்.

அப்படிப்பட்ட மென்பொருள்கள் தற்போதைய சூழ்நிலையில் இல்லை என்றாலும் இணையதளத்தில் இதற்காகவே ஒருசில ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் டப் செய்யப்பட்டு இருக்கின்றன. அதைப் பயன்படுத்தி நமது புகைப்படங்களை கொடுப்பதன் மூலம் நமது புகைப்படத்தில் நமது உடலை தவிர பின்புற பகுதியில் இருக்கின்ற அனைத்து பொருளாக இருந்தாலும் சரி செடி கொடி மரம் மற்றும் இதர எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் முழுமையாக அகற்றி நம்மிடம் ஒப்படைக்கப்படும். இதற்குப் பிறகு நீங்கள் அந்த புகைப்படத்தை பிஎன்ஜி எனப்படும் பார்மட்டில் பெற்றுக்கொள்வீர்கள் எளிதாக போட்டோஷாப் சாப்ட்வேரில் நீங்கள் தேவைக்கு ஏற்றவாறு எடுத்து பயன்படுத்திக் கொள்ளும் வகையில் அமைந்து விடும்.

அப்படிப்பட்ட இணையதளம் தான் remove bg. இந்த இணையதளத்தைப் பயன்படுத்தி உங்களது தேவைக்கு ஏற்றவாறு எந்த ஒரு புகைப்படமாக இருந்தாலும் சரி அதை அப்லோட் செய்து விட்டு இரண்டு மூன்று நொடிகளில் உங்களது புகைப்படத்தின் பின்புற பக்கங்களை இந்த இணையதளத்தில் வடிவமைக்கப் பட்டிருக்கின்ற அதாவது ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் முழுமையாக அகற்றி உங்களிடம் பிஎன்ஜி எனும் பார்மட்டில் தந்துவிடுவார்கள்.

தற்போதைய சூழ்நிலையில் இந்த இணையத்தளமானது வெகு சிலருக்கு மட்டுமே தெரிந்திருக்கிறது வரக்கூடிய காலகட்டங்களில் இந்த இணையத்தளம் மிகவும் பிரபலம் அடைவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன. இன்றைய காலகட்டத்தில் நீங்கள் ஒன்றை மட்டும் தெரிந்து கொள்ள வேண்டும் பணம் இன்றி எந்த ஒரு வேலையும் நடக்காது இருப்பினும் இந்த இணையத்தளமானது உங்களிடம் சாதாரண புகைப்படங்களுக்கு பணம் எதுவும் வாங்காமல் வேலை செய்து கொடுத்து விடும். ஒருவேளை நீங்கள் தரக்கூடிய புகைப்படமானது மிகவும் சிறந்த அளவில் குவாலிட்டியில் இருந்தாள் அதற்கு நீங்கள் பணம் கட்டி தான் இவர்களது சலுகையை அனுபவிக்க வேண்டும் இருப்பினும் உங்கள் புகைப்படத்தின் தரம் மட்டுமே இதை நிர்ணயிக்கிறது என்பதால் நீங்கள் சாதாரண புகைப்படத்தை எளிதாக இலவசமாக இவர்களது செயல்பாட்டை பெற்றுக்கொள்ளலாம்.

தற்போதைய காலகட்டத்தில் எவ்வளவு யூடியூபில் வேலை செய்து கொண்டிருக்கும் அதாவது யூடியூபில் வீடியோ உருவாக்கிக் கொண்டிருக்கும் பல நபர்கள் அவர்களது வீடியோவிற்கு தேவையான பிஎன்ஜி பார்மட் புகைப்படங்களை எடுப்பதற்கு இந்த இணைய தளத்தை அதிகமாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்த இணையதளம் செய்கின்ற அதே வேலையை இன்னும் எவ்வளவு இணையதளங்கள் செய்து கொண்டுதான் இருக்கிறது இருப்பினும் அதில் என்ன பிரச்சினை என்றால் நமக்கு தரக்கூடிய புகைப்படத்தில் அதாவது பின்புறத்தை அகற்றி நமக்கு தரக்கூடிய புகைப்படங்கள் அனைத்திலும் அந்த இணையதளத்திற்கு சம்பந்தப்பட்ட ஏதாவது லோகோ அல்லது வார்த்தைகள் பதியப்பட்டு தரப்படுகிறது பணம் தந்து அவர்களது வேலையை நீங்கள் பெற்றிருந்தால் மட்டுமே இப்படி பட்ட வார்த்தைகள் எதுவும் அங்கு இடம் பெறாமல் இருக்கும்.

இணையதளத்திற்கு செல்ல கீழே உள்ள பொத்தானை அழுத்தவும்v

Admin

My Website Motivation is Easy to Understand, Tech in Tamil, and Get Latest Tech Updates in Tamil, We Do Tips and also Innovation, I Wanted Each And Every Individual Whoever Is Interested In Technology To Be Able To Understand It In The Easiest Possible Way, Thanks.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *