How To Write Best Description For YouTube
யூடியூப் Description இன்றைய சூழ்நிலையில் பல யூடியூபர் களுக்கு எதிரியாக தான் இருக்கிறது ஏனென்றால் பெரும்பாலான நபர்கள் ஆங்கிலம் சரிவர எழுத தெரியாத நபர்களாக இருக்கிறார்கள். அதேசமயம் யூட்யூபில் Description கொடுக்கின்ற வீடியோவின் வாழ்வை விட வேறு எந்த ஒரு செயல்பாடுகளும் உங்கள் வீடியோவை பல நபர்களுக்கு கொண்டு போய் சேர்க்காது. ஆனால் ஆங்கிலம் என்பது பல நபர்களுக்கு எதிராக இருப்பதால் Description பயன்பாட்டை பயன்படுத்துவதே கிடையாது.
இதை சரி செய்வதற்கு தற்போதைய சூழ்நிலையில் யூடியுபில் Description தமிழில் எழுதலாம் என்ற சூழ்நிலை அமைந்து விட்டது. கூகுள் நிறுவனமும் தமிழ்மொழியையும் ஆதரிக்க ஆரம்பித்துவிட்டது இருப்பினும் பிரச்சினை என்னவென்றால் தமிழின் ஆழத்தை அறிந்துகொள்ள மனிதனே ஆராயும் சூழ்நிலையில் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் என்ன செய்யும், ஆகையால் என்னதான் தமிழில் நாம் எழுதினாலும் சரியாக புரிந்து கொள்ளும் நிலையில் கூகுளின் தற்போதைய சூழ்நிலையில் உள்ள A.I சிஸ்டம் இல்லை.
இதன் விளைவாக கிடைக்கின்ற சிறிய சிறிய குறுக்கு வழிகளை நாம் பயன்படுத்திக் கொள்வது எந்த வகையிலும் தவறும் கிடையாது. அப்படிப்பட்ட ஒரு குறுக்கு வழியை தான் கீழுள்ள வீடியோவில் எடுத்துக்கூறி இருக்கிறேன். வீடியோவில் குறிப்பிட்டுள்ளவாறு கொடுக்கப்படுகின்ற இணையத்தளமானது உங்கள் வீடியோவிற்கு சம்பந்தப்பட்ட சில ஆங்கில பரக்ராப் உங்களுக்காக உருவாக்கித்தரும். ஆனால் நன்றாக ஒரு விசயத்தை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் இது தரக்கூடிய பெரும்பாலான பரக்ராப் ஏற்கனவே இணையதளத்தில் பல கட்டுரைகளாக பதியப்பட்டது எடுத்துரைக்கும் விதத்தில் தான் இருக்கும். இருப்பினும் உங்கள் வீடியோவுடன் பொட்டு செல்வதால் தாராளமாக பயன்படுத்திக் கொள்ளலாம்.