The Best Free Keyword Search Tool

தற்போதைய காலகட்டத்தில் பல நபர்கள் யூடியூப் மட்டும் இணையதளத்தில் பணம் சம்பாதிப்பதற்காக அவர்களது முழுநேர வேலையாக இறங்கிவிட்டார்கள். ஆனால் இணையதளத்தில் பணம் சம்பாதிப்பது அவ்வளவு எளிதான காரியம் கிடையாது எந்த ஒரு தொழிலாக இருந்தாலும் அங்கு வேலை செய்வதற்கு முன் அந்த தொழிலை பற்றி நன்கு அறிந்து கொள்ள வேண்டும் இன்னும் சொல்லப்போனால் நீங்கள் செல்லும் பாதையைப் பற்றி நன்றாகத் தெரிந்திருந்தால் மட்டுமே சரியான இலக்கை அடைய முடியும்.

இங்கு பாதை என்பது நீங்கள் வேலை செய்யப்போகும் துறை சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்வதாகும் அந்த வகையில் யூட்யூப் மட்டும் இணையதளம் செயல்படுத்தி வருகின்றன அவர்கள் அவர்களது பொருள்களான அதாவது இவை பொருத்தவரைக்கும் உருவாக்கும் வீடியோவாக இருக்கட்டும் இணையதளத்தை பொருத்தவரைக்கும் உருவாக்கும் கட்டுரைகளாக இருக்கட்டும் இதுதான் அந்த படைப்பாளர்களின் உரிமை கூறிய பொருள். இதைதான் இணையதளத்தில் அவர்கள் பரப்பி பணம் சம்பாதிக்கிறார்கள் நீங்களும் இதில் ஏதாவது ஒன்றில் இருக்கலாம்.

ஆனால் இந்த இரண்டு துறைகளை பற்றி நன்றாக தெரியாத நபர்கள் ஆக நீங்கள் இருந்தால் கண்டிப்பாக உங்களது சேனலாக இருந்தாலும் சரி இணையதளமாக இருந்தாலும் சரி பார்வையாளர்கள் கண்டிப்பாக வந்திருக்காது ஏன் என்று புரிந்து கொள்ளுங்கள், யூடியூப் மற்றும் இணையதளத்தில் நமக்கு பார்வையாளர்கள் சம்பாதிப்பதற்கு சரியான Key Word ரிசர்ச் செய்ய வேண்டும். அப்பதான் உங்களுக்கு நல்ல பார்வையாளர்கள் கிடைப்பார்கள்.

நீங்கள் கேட்கலாம் எப்படி key word எங்களுக்கு பார்வையாளர்களை பெறுவதற்கு உதவும் என்று. உண்மையை சொல்லப்போனால் இன்றைய இணைய உலகத்தில் அதாவது இன்டர்நெட்டில் பல நபர்கள் எப்படி ஒரு பொருளையோ அல்லது ஒரு சில கதைகளையும் கட்டுரைகளையும் தேடுகிறார்கள் என்பது நமக்குத் தெரிந்தால் தான் அதாவது அவர்கள் தேடுவதற்கு பயன்படுத்தும் வார்த்தைகள் எப்படி இருக்கிறது என்பது நமக்கு தெரிந்தால்தான். அதைப் பயன்படுத்தி நமது வீடியோவை அல்லது இணையதளத்தில் எழுதி வைக்கின்ற கட்டுரைகள் ராங் செய்யமுடியும்.

இன்னும் தெளிவாக சொல்லப்போனால் ஒரு நபர் சென்று கொண்டிருக்கும் பாதையை நாம் அறிந்து கொண்டால் தான் அவரை பின்தொடர முடியும் அதுபோன்றுதான் key word செயல்படுகிறது.

இணையத்தளமானது பல நபர்கள் தேடலுக்கு பயன்படுத்தப்படும் வார்த்தைகளை அடிப்படையாக வைத்து செயல்படுகிறது அந்த வகையில் நீங்கள் யூட்யூப் சேனல் வைத்திருந்தாலும் சரி அல்லது இணையதளமே நடத்திக் கொண்டிருந்தாலும் சரி உங்களது படைப்புகளை உடனடியாக பார்வையாளர்கள் முன் கொண்டுபோய் வைப்பதற்கு அவர்கள் செல்லும் பாதை எதுவென்று நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும் அதற்காக அவர்கள் பயன்படுத்தும் தேடலுக்கான வார்த்தைகளை நன்கு அறிந்துகொண்டு உதாரணத்திற்கு யூடியூப் வீடியோவை நீங்கள் ராங்க் செய்யவேண்டுமென்றால் அவர்கள் தேடலுக்கு பயன்படுத்திய வார்த்தைகளை அதிகமாக உங்களது டிஸ்கஷன், டைட்டில், டாக் போன்ற பகுதிகளில் பயன்படுத்தி இதன்மூலம் பார்வையாளர்கள் அதிகமாக பெறுவதற்கு வாய்ப்பை அமைத்துக் கொள்ள முடியும்.

யூடிபில் பொருத்தவரைக்கும் ஒரு பயனர் அதாவது யூடியூபில் பொழுது போக்கின் காரணமாக வந்த ஒரு அல்லது ஏதாவது கற்றுக்கொள்ள வேண்டுமென்று வந்தவரோ அவர் என்ன வார்த்தையை டைப் செய்து தேடுகிறார்கள் அந்த வார்த்தை எந்த வீடியோக்களில் அதிகமாக இருக்கிறதோ அதையே அவர்களின் முன் கொண்டு வந்து நிறுத்தும் அந்த வகையில் அவர்கள் தேடலுக்காக பயன்படுத்தும் வார்த்தையை நீங்கள் உங்கள் வீடியோவில் அதிகமாக அதன் meta tagயில் கொடுத்து இருந்தாள் உங்கள் வீடியோ உடனடியாக பார்வையாளர்களை பெற்று விடும் என்பதில் எவ்வித சந்தேகமும் கிடையாது.

ஆனால் இதற்கு கொஞ்சம் நாட்களும் எடுத்துக்கொள்ளும் ஏனென்றால் யூடியூப் ஆக இருந்தாலும் சரி இணையதளமாக இருந்தாலும் சரி உங்களது படைப்பானது கூகுளுக்கு தெரிவதற்கு ஒரு நாள் முதல் ஒரு மாதம் வரை எடுத்துக்கொள்ளும்.

இப்போது நீங்கள் key word என்றால் என்ன என்பதை தெளிவாக அறிந்திருப்பீர்கள். இந்த நபர்கள் கண்டிப்பாக இப்போது நான் எப்படி தேடுவது மக்கள் பயன்படுத்தும் வார்த்தைகளை எப்படி நான் அறிந்து கொள்வது என்று நீங்கள் கேட்டால் அதற்காக இணைய உலகத்தில் எவ்வளவோ இணையத்தளங்கள் இருக்கிறது இந்த ஒரு பிரத்தியேகமான காரியத்திற்காக. அதிகபட்சம் இணையத்தளத்தில் கட்டுரைகள் பதிவிட்டு இருக்கும் நபர்கள் தான் இப்படிப்பட்ட இணையதளத்தை தேடி அலைந்து கொண்டே இருப்பார்கள் ஏனென்றால் அவர்களுக்கு இதனுடைய மதிப்பு நன்றாகவே தெரியும் யூடியூபில் எனக்கு தெரிந்த வரைக்கும் நானும் ஒரு யூடியூபர் தான் அதிகபட்ச படைப்பாளர்கள் இப்படிப்பட்ட இணையதளத்தை தேடுவதில்லை ஆனால் யூடியூபிலும் இந்த முறையை தெளிவாக பயன்படுத்தினால் நமது சேனல் பார்வையாளர்களை அதிகமாக சம்பாதிக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் கிடையாது.

இன்று நான் உங்களுக்கு ஒரு இணையதளத்தை பரிந்துரைக்க போகிறேன் இந்த இணைய தளத்தை நீங்கள் பயன்படுத்துவதற்கு இரண்டு முறைகளை கையாள முடியும் ஒன்று இலவசமாக பயன்படுத்தலாம் அதில் இலவசம் என்பதால் சின்ன சின்ன பிரத்யேக அம்சங்கள் கிடைக்காது ஆனால் உங்களுக்கு தேவையான அனைத்து அம்சங்களும் அதாவது தெளிவான வரையறைக்கு உட்படாத வசதிகள் அனைத்தும் உங்களுக்கு கொடுக்கப்படும் ஒருவேளை எதிர்காலத்தில் நீங்கள் இந்த இணையதளத்தில் இருக்கின்ற ப்ரோ லெவல் ஃப்யூச்சர்ஸ் பெற விரும்பினால் நீங்கள் பணம் கட்டி கூட இந்த இணையதளத்தின் சந்தாதாரர்கள் ஆக மாறி கொள்ளலாம் ஆனால் ஆரம்பகட்டத்தில் எனது பரிந்துரை நீங்கள் பணமில்லாமல் இணையதளத்தை பயன்படுத்தி அறிந்துகொண்டு பின்னர் உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டுமே எதிர்காலத்தில் இந்த இணையதளத்தை பயன்படுத்துவதற்கு பணம் கொடுத்து சந்தாதாரராக மாறலாம்.

அந்த இணையதளத்தின் பெயர் Answer The Public, எனது அனுபவத்தில் இவ்வளவு சிறப்பான அம்சங்களை இலவசமாக பயன்படுத்துவதற்கு இந்த இணையதளம் கொடுக்கும் அளவை மற்ற இணையதளங்களில் நான் ஒப்பிட்டுப் பார்க்கும்போது answer the public இணையத்தளமானது எனக்கு தலை சிறந்த நிறுவனமாக தான் தெரிகிறது.

பொதுவாக நீங்கள் இப்படிப்பட்ட இணையதளத்திற்கு சென்று விட்டாலே உங்களால் பயன்படுத்தலாமா வேண்டாமா, முழுமையாக நமக்கு பதில்களை தர மறுக்கிறது, ஒரு நாளைக்கு இவ்வளவு தான் தேட முடியும் என்ற கட்டுப்பாடு விதிக்கிறது, இப்படிப்பட்ட குற்றச்சாட்டுகளை நாம் அந்த இணையதளத்தில் தெரிவித்து அதை காலப்போக்கில் பயன்படுத்தாமலே போகிவிடும் என்னதான் அது இலவசமான சந்தாதாரர்களுக்கு சிறந்த சேவைகளை கொடுத்துக்கொண்டு இருந்தாலும் நமக்கு குறிப்பிட்ட கட்டுப்பாடுகள் இருப்பதால் அந்த இணையதளத்தின் மீது ஒரு சில ஆட்சேபனை ஏற்பட்டுவிடும். ஆகையால் பயன்படுத்தாமலே போய்விடுவோம்.

ஆனால் answer the public உங்களுக்கு அனைத்து வசதிகளையும் கொடுக்கிறது இருப்பினும் இலவச சந்தாதாரர்களுக்கு எண்களின் கணக்கு வரிசையின் படி அதாவது துல்லியமாக நம்பர்களை காட்டி இந்த வார்த்தையானது இவ்வளவு நபர்கள் தேடுகிறார்கள், இவ்வளவு vol இருக்கிறது. என எங்களை அடிப்படையாக வைத்து துல்லியமாக உங்களுக்கு சொல்லாது அதற்கு காரணம் இலவச சந்தாதாரர்களுக்கு இந்த ஒரு சிறப்பம்சம் கிடையாது நீங்கள் இலவசமாக கீவர்டுகளை பார்த்துவிடலாம். ஆனால் அதனுடைய அளவுகளை துல்லியமாக தெரிந்து கொள்ள முடியாது அப்படி தெரிந்து கொள்ள விரும்பினால் நீங்கள் அந்த இணைய தளத்திற்கான பணம் கொடுத்து இணைந்த சந்தாதாரர்கள் ஆக இருக்க வேண்டும்.

இருப்பினும் இலவசமாகவே நாம் ஓரளவுக்கு ஒரு வார்த்தையை அதிகமான நபர்கள் தேடுகிறார்கள் என்பதைப் பார்ப்பதற்காக நிறங்கள் வரிசையின் அடிப்படையில் நமக்கு கொடுக்கப்படுகின்ற ரிசல்ட் இல் காண்பிக்கப்படும் இது பற்றி தெளிவாக நமது யூடியூப் சேனலில் பதிவேற்றம் செய்திருக்கின்ற வீடியோவில் கூறியிருக்கிறோம் நீங்கள் விருப்பப்பட்டால் அந்த வீடியோவை பார்க்கலாம் இந்த கட்டுரையின் கீழ் பகுதியில் அந்த வீடியோவிற்கான காண்பதற்கான பகுதி அமைக்கப்பட்டிருக்கிறது கண்டிப்பாக வீடியோவை பார்த்து இன்னும் பல தகவல்களை அந்த இணையதளத்தை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

answer the public எனக்கு தனிப்பட்ட முறையில் இந்த இணையத்தளமானது அதனுடைய ui மூலமாக மிகவும் பிடித்துவிட்டது ஏனென்றால் இவர்களது இணையதளத்தில் நீங்கள் நுழைந்தவுடன் இந்த இணையத்தளத்தை நடத்துபவராக என்பது எனக்கு தெரியவில்லை ஆனால் அவரது ui உங்களை பார்ப்பது போன்று அமைக்கப்பட்டிருக்கும் இது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து இழுக்கிறது.

மேலும் இவர்களது இணையதளத்தில் நீங்கள் ஆங்கிலம் வார்த்தைகளை பயன்படுத்தி வீடியோக்கள் உருவாக்கி இருந்தாலும் அல்லது தமிழில் நீங்க வந்து பேசி வீடியோக்கள் உருவாக்கி இருந்தாலும் அந்த வீடியோவிற்கு கொடுக்கப்படுகின்ற meta tag ஆங்கிலத்தில் கொடுப்பதாக இருந்தால் கண்டிப்பாக இந்த இணையதளம் உங்களுக்கு உதவும். நான் இப்ப கூறிய வார்த்தைகளின் அர்த்தம் என்னவென்றால் இந்த இணையதளம் தமிழ் வார்த்தைகளுக்கு பொருந்தாது ஆங்கில வார்த்தைகளுக்கு மட்டுமே பொருந்தும் ஆகையால் நீங்கள் ஆங்கிலத்தில் உங்கள் வீடியோ மற்றும் இதேபோன்றுதான் இணையதளத்திற்கு. அப்படி நீங்கள் ஆங்கில வார்த்தைகளுக்கு தேவைப்படுகின்ற key word அனலைஸ் செய்வதாக இருந்தால் கண்டிப்பாக உங்களுக்கு இந்த இணையதளம் ஒரு வரப்பிரசாதம் என்று கூட கூறலாம்.

தனிப்பட்ட முறையில் நான் இந்த இணையதளத்தை பயன்படுத்தினேன் கிட்டதிட்ட பத்து நாட்கள் பயன்படுத்திய பிறகுதான் நான் எனது யூடியூப் சேனலில் வீடியோவாகவும் பதிவேற்றம் செய்தேன்.

அப்படி நான் இந்த இணையதளத்தில் இருந்து பெறப்பட்ட வார்த்தைகளை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட வீடியோவில் meta tag கொடுக்கும்போது முதல் 10 வீடியோவின் வரிசையில் எட்டாவது வரிசையை எனது வீடியோ பிடித்துவிட்டது ஒருவேளை இது வீடியோவிற்கு சம்பந்தப்பட்ட மற்றும் வீடியோவை பார்த்த நபர்களால் வீடியோ எவ்வளவு சுவாரசியமாக இருக்கிறது என்பது கூகுளுக்கு தெரிந்திருந்தால் மட்டுமே நடந்திருக்கும் என்ற சந்தேகத்தில் நான் ஏற்கனவே அப்லோட் செய்து இருந்த வீடியோவிலும் இதைப்போய் செய்து பார்த்தேன். அப்போது எனக்கு கிடைத்த பதில் என்னவென்றால் key கொடுப்பதற்கு முன் அந்த வீடியோவானது யூடியூபில் எந்த பக்கத்தில் இருக்கிறது என்பது கூட எனக்கு தெரியவில்லை. ஆனால் answer the public மூலமாக வார்த்தைகளை அந்த வீடியோவிற்கு தேவையான meta tag ஆக மாற்றி கொடுத்தவுடன் கிட்டத்தட்ட மூன்று நாள் காத்திருந்தேன் மூன்று நாட்களுக்குப் பிறகு நான் பார்க்கும்போது அந்த வீடியோவானது 27வது இடத்தை பிடித்திருந்தது. எனக்கு இந்த விஷயத்தை பார்த்தவுடன் மிகவும் ஆச்சரியமாக இருந்தது. நான் முதலிலேயே கூறி இந்த மாதிரி key word என்பது நமது வீடியோக்களுக்கு உடனே பார்வையாளர்களை கொண்டு வருவதற்கு உதவுகின்ற மிகச் சிறந்த வழிகாட்டியாகும். ஆனால் சரியான வழியை தேர்வு செய்து அதை நமது வீடுகளிலும் சரி அல்லது இணையதளத்தில் நாம் உருவாக்கும் கட்டுரைகளிலும் பயன்படுத்துவது தான் இன்றைய காலகட்டத்தில் இணைய உலகத்தில் மிகப்பெரிய சவாலான காரியமாக இருக்கிறது.

ஆகையால் நான் கூறிய Answer The Public இணையதளத்தை கண்டிப்பாக பயன்படுத்துங்கள்.

மேலும் விவரங்களுக்கு கீழுள்ள வீடியோவை பாருங்கள்

v

Admin

My Website Motivation is Easy to Understand, Tech in Tamil, and Get Latest Tech Updates in Tamil, We Do Tips and also Innovation, I Wanted Each And Every Individual Whoever Is Interested In Technology To Be Able To Understand It In The Easiest Possible Way, Thanks.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *