Top 7 Online Job Earning Website

இன்றைய காலகட்டத்தில் பணம் சம்பாதிக்க தான் ஒவ்வொரு நபர்களும் ஆசைப்படுகிறார்கள். அதுவும் இணையதளத்தின் வாயிலாக தான் சம்பாதிக்க நூற்றில் கிட்டத்தட்ட 80 முதல் 90 சதவீதம் அல்லது 95% வரையாவது மக்கள் இணையதளத்தின் மூலமாக நாம் சம்பாதிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள்.

2019 இல் அமெரிக்கா ஒரு சின்ன ஆய்வு மேற்கொண்டது தற்போதைய இளைஞர்கள் இணையதளத்தில் வேலை செய்ய விரும்புகிறார்களா அல்லது ஒரு புது நிறுவனத்தில் வேலை செய்ய விரும்புகிறார்களா அல்லது சுய தொழில் செய்ய விரும்புகிறார்கள் என்பது. இதில் வந்த பதில் என்னவாக இருந்தது என்று பார்க்கும் போது அதிகமான இளைஞர்கள் இணையத்தளத்தின் மூலமாக சம்பாதிக்க விரும்புகிறார்கள் என்று ஓட்டெடுப்பில் தெரியவந்தது ஆகையால் முதலிடம் இணையதளத்திற்கு சென்று இரண்டாவது சுய தொழில் செய்து சம்பாதிக்க விரும்புவதாக வந்திருந்தது ஆகையால் அந்த ஓட்டெடுப்பில் அளவுகளை வைத்து சுயதொழில் இரண்டாவது பகுதியை ஆட்கொண்டது மூன்றாவதாக மற்ற நிறுவனங்களில் சென்று வேலை பார்ப்பது இடம் பிடித்திருந்தது.

அதிகபட்ச நபர்கள் இணையதளத்தின் வாயிலாக மட்டுமே சம்பாதிக்க ஒரு தனித்துவமான மோகம் வைத்திருக்கிறார்கள் நோக்கமும் வைத்திருக்கிறார்கள். ஆனால் சோகமான செய்தி என்னவென்றால் அதிகபட்ச நபர்கள் தான் வேலை செய்யும் இணையத்தளமானது தற்காலிகமாக நமக்கு பணம் தரக்கூடிய பகுதி என்று தெரிய வருவதில்லை. உதாரணத்திற்கு நீங்கள் இணையதளத்தின் வாயிலாக இருக்கக்கூடிய ஒரு சில வீடியோகேம் பணம் கட்டி விளையாடுவது போன்று இருக்கும் அதில் நீங்கள் ஜெயித்தால் பணம் நீங்கள் சம்பாதிப்பீர்கள். இதில் நாம் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் ஒருவகையில் இணையதள விளையாட்டு என்று இல்லாமல் அது சூதாட்டமாக மாறுகிறது அதேசமயம் மக்கள் இது நம் முதல் நேரம் அதாவது முழு நேரமும் இந்த இணையதளத்தில் வேலை செய்ய முடியாது என்பதே தெரியாமல் அவர்கள். கால் போன போக்கில் கிடைத்த இணையதளத்தில் வேலை செய்ய ஆரம்பிக்கிறார்கள் ஆனால் ஒரு கட்டத்துக்கு மேல் அந்த இணையதளத்தின் மூலம் நஷ்டங்களை மட்டுமே எதிர்பார்க்க இயலும்.

இதுவே இந்தியாவை நாம் குறிப்பிட்டு பேசப் போனால் இந்தியாவில் ஜியோ என்ற சேவை வந்த பிறகு எவ்வளவு நபர்கள் இணையதளத்தை தண்ணி போன்று செலவு செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். இன்றைய காலகட்டத்தில் தண்ணியை கூட நாம் சிக்கனமாக தான் பயன்படுத்துகிறோம் ஆனால் இணையதளம் என்பது நாம் வாரி வழங்கும் ஒரு மழை போன்று மாறிவிட்டது. ஒரு காலகட்டத்தில் ஒரு ஜிபி என்பது கனவில் மட்டுமே நினைக்க முடிந்தது ஆனால் இன்று ஒரு ஜிபி கூட மாற்றுகிறது என்று சொல்லும் நபர்கள் தான் அதிகம்.

இப்படிப்பட்ட நபர்கள் ஒரு கட்டத்திற்கு வரை தேவையற்ற அல்லது பொழுதுபோக்கு அம்சங்கள் சார்ந்த வீன் அடித்துக் கொண்டிருப்பார்கள், பின்னர் பொழுதுபோக்கு மட்டுமே ஒரு வாழ்வின் முக்கியத்துவம் கிடையாது என்று தெரிந்த பிறகு சம்பாதிக்க வேலைக்கு செல்ல ஆரம்பிப்பார்கள். ஆனால் ஒரு சிலர் மட்டும் நான் பயன்படுத்தும் இணையதளம் இவ்வளவு மலிவாக கிடைக்கும் பட்சத்தில் இதில் ஏதாவது நாம் தொழில்ரீதியாக செய்யமுடியுமா என்று யோசிப்பார்கள். அப்படி யோசிக்க நபர்கள் நீங்கள் என்றால் இந்த கட்டுரையில் நாம் ஏழு இணைய தளங்களை பற்றி நன்கு அறிந்து கொள்ளப் போகிறோம் இதன் விளைவாக நாம் இணையதளத்தில் அதிகம் சம்பாதிக்க சிறந்த இடம் எதுவென்று தேர்வு செய்துகொள்ள முடியும்

எதற்காக நான் இப்படிக் கூறுகிறேன் என்றால் இணையத்தளத்தில் ஆயிரம் இணையதளங்கள் இருந்தாலும் அதில் 10 முதல் 40 சதவீத இணையதளங்கள் மட்டுமே நாம் செய்யும் வேலைக்கு பணம் தரக்கூடிய இணையதளமாக இருக்கிறது. மீதி உள்ளது நமது வேலையை வாங்கிக்க விரும்புகிறார்கள் ஆனால் பணம் என்பதை கனவாக மட்டுமே காண முடிகிறது.

ஆகையால் நமது பட்டியல் ஆனது முழுக்க முழுக்க ஆய்வு மேற்கொண்டு இன்னும் சொல்லப்போனால் நமது யூடியூப் PROFIT WAY சேனலில் இதை பற்றின தகவல்கள் ஒன்று திரட்டி இந்த இணையதளம் நமக்கு பணம் தருகிறது தரவில்லையா தற்போதைய சூழ்நிலையில் அதாவது 2020இல் இந்த இணையதளங்கள் அனைத்தும் செயல்படுகிறதா என்பதை நன்கு அறிந்து தெரிந்து உங்களுக்கான சிறப்பு பதிவாக வீடியோ வாயிலும் சரி அல்லது கட்டுரையின் வாயிலாகவும் சரி சிறப்பாக பணியாற்றுகிறேன் என்று நான் நம்புகிறேன்.

1. Usability Hub:

முதலாவதாக நமது பட்டியலில் இடம் பிடித்திருக்கும் சிறந்த இணையதளத்தின் முதல் இணையதளம் எதுவென்றால் யூஸ் அபிலிடி டெஸ்டர். இந்த இணையத்தளமானது செய்திகள் மற்றும் மென்பொருள்கள் இன்னும் ஒரு சில விர்ச்சுவல் உலகத்தில் அங்கங்களை ஒரு பயனர் தரப்பிலிருந்து அவர் பயன்படுத்தி பார்க்கும்போது எப்படி உணருகிறார் நாம் உருவாக்கிய பொருளை வாங்க மனம் உருகும் பயனர்களுக்கு விருப்பம் இருக்கிறதா நமது பொருளை வாங்குவது. என்பதை நன்கு தெரிந்து அறிந்து புரிந்து அதற்குரிய வேலையை கொடுத்துக்கொண்டிருக்கும் மிகச்சிறந்த இணையதளத்தின் பட்டியலில் முதல் 10 க்குள் வரக்கூடிய இணையதளம் தான். usability hub.

இந்த இணையத்தளமானது முழுமையாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது இதன் மூலம் சம்பாரித்த பணத்திற்கான சான்றை நாம் நமது யூடியூப் சேனலில் பதிவேற்றம் செய்து இருக்கிறோம் உங்களுக்கு விருப்பம் இருந்தால் இந்த கட்டுரையின் கீழ் அந்த வீடியோ பார்ப்பதற்கான வசதியை ஏற்படுத்தி தந்திருக்கிறேன் .

மேலும் விவரங்களுக்கு கீழுள்ள வீடியோவை பாருங்கள்

v

2. Acx:

யூடியூபில் தற்போதைய சூழ்நிலையில் நீங்கள் பிரகாஷ்ராஜ் நடிகர் அவர்களால் உருவாக்கப்பட்டதாக கூறப்படும் தி லிட்டில் டக் கேஆல் என்ன படம் ஆடியோ புக் பற்றின விளம்பரத்தை பார்த்து இருப்பீர்கள் இன்னும் ஒரு சிலர் முகப்புத்தகத்தில் கூட இந்த விளம்பரம் வந்து நீங்கள் பார்த்து இருக்கலாம்.

இது ஒரு எடுத்துக்காட்டு தான். பிரகாஷ்ராஜ் அவர்களின் குரலில் ஒரு புத்தகத்தை படிக்க கூறி அவர் படிக்கும் போது அவரது குரலை பதிவு செய்து அவர் படித்த புத்தகத்திற்கான ஆடியோ புக் என சொல்லி விற்கப்படும். இதைதான் நாம் ஆடியோ புக் என்று கூறுவோம். உங்களுக்கு இன்னும் புரியவில்லை என்றால் தெளிவாக நான் கூறுகிறேன் ஒரு நபர் ஒரு புத்தகத்தை படிக்க விரும்புகிறார் ஆனால் அவருக்கு நேரமில்லை அல்லது இன்னும் ஒரு சில பிரச்சினையின் விளைவாக அந்த புத்தகத்தை படிப்பதற்கு அவரால் நேரத்தை ஒதுக்க முடியவில்லை இதன் விளைவாக யாராவது நமக்கு படித்து கூறினாள் நன்றாக இருக்குமே என்று நினைக்கும் பட்சத்தில் ஆடியோ புக் அவருக்கு கைகொடுக்கிறது ஆடியோ புக் அவர் படிக்க விரும்பிய அந்த புத்தகத்தை வேறு ஒரு நபர் வாசித்து அவர் வாசிக்கும் போது அவரது குரல்களை பதிவு செய்து பின்னர் அதை ஆடியோ புக் காக விற்கப்படும் குறிப்பிட்ட அந்த புத்தகத்தை படிக்க முடியவில்லை என்று நினைப்பவர்கள் அந்த ஆடியோ புக்கை வாங்கி கேட்டாலே போதும் புக்கில் என்ன இருக்கிறது என்பது ஒருவரின் குரல் வழியாக நன்கு அறிந்து கொள்ளலாம்.

இப்படி நீங்களும் குரல் கொடுத்து புத்தகத்தை வாசித்தால் அதற்கு பணம் தரக்கூடிய இணையதளங்கள் இன்றைய இணைய உலகில் இருக்கிறது அதில் மிகச் சிறந்த இணையதளம் என்று எடுத்துகொண்டாள் acx என்று கூறலாம்.

acx மிகப்பெரிய மூன்று நிறுவனங்கள் உடைய வியாபார உறவில் இருக்கின்றன அதிலொன்று அமேசான் கூட. acx கிடைக்க வேண்டுமென்றால் உங்கள் வாசிப்பு திறனில் ஒரு உயிரோட்டம் இருக்க வேண்டும் நீங்கள் வாசிக்கும் போது அது உணரும் வகையில் உணர்வு பூர்வமாகப் பேச தகுந்த வார்த்தைகளையும் உணர்ச்சிகளை தெளிவாக வெளிப்படுத்தும் விதமாகவும் இருக்க வேண்டும் அப்படி என்றால் மட்டுமே இந்த நிறுவனம் உங்களை வேலைக்கு எடுத்துக் கொள்ளும்.

இது பற்றி தெளிவாக நாம் வீடியோவில் குறிப்பிட்டு நமது யூடியூப் சேனலில் பதிவேற்றம் செய்து இருக்கிறோம் அதற்கான வீடியோ உங்களுக்கு இந்த கட்டுரையின் கீழ் கிடைத்துவிடும்.

இங்கு வேலை செய்ய ஒரு சில பொருள்கள் உங்களிடமும் இருக்க வேண்டும் அது வேறொன்றுமில்லை உங்கள் குரல்களை அழகாக பதிவு செய்வதற்கு தேவையான மைக் மற்றும் இணைய தளத்தில் இதற்காகவே பிரத்தியேகமாக மென்பொருள்கள் இருக்கின்றன அதில் மிகச் சிறந்த இலவசமான மென்பொருள் என்று எடுத்துக்கொண்டால் audacity என்று கூறப்படும் மென்பொருள் அதை நீங்கள் இணையதளத்தில் தேடியும் எடுத்துக்கொள்ளலாம் ஒன்றும் பிரச்சினை கிடையாது பணம் எதுவும் செலுத்த தேவையில்லை.

acx இங்கு வேலை செய்வதாக இருந்தால் நீங்கள் ஒவ்வொரு புத்தகத்திற்கும் அதாவது அங்கு நீங்கள் கோடிக்கணக்கான லட்சக் கணக்கான ஆயிரக்கணக்கான புத்தகத்தை பார்ப்பீர்கள் ஆனால் நீங்கள் இந்த இணையதளத்தில் இணைந்து விட்டார்கள் என்பதற்காக உடனே போய் அந்த புத்தகத்திற்கான வேலையை வாங்கி விட முடியாது ஒவ்வொரு புத்தகத்திற்கும் ஒரு சில நிபந்தனைகள் இருக்கும் அதே மாதிரி ஒரு புத்தகத்தை நீங்கள் வாசித்து பதிவு செய்து ஆடியோ புக் உருவாக்க அனுமதி கேட்க வேண்டும் என்றால் நீங்கள் ஒவ்வொரு புத்தகத்திற்கும் ஆடிஷன் கொடுக்க வேண்டும் இந்த ஆடிஷன் ஆனது உங்கள் குரல் எப்படி இருக்கிறது எப்படி வாசிப்பில் உணர்ச்சிகள் எப்படி கொடுப்பீர்கள் என்பதை நிறுவனம் தெரிந்து கொள்ள மிகவும் உதவும். இதன் பிறகுதான் உங்களுக்கு வேலையே கொடுக்கப்படும் ஆகையால் தயவு செய்து உங்களது குரலை பதிவு செய்ய வேண்டும் அதன் பிறகு தான் வேலை இங்கு கிடைக்கும் என்பதை நன்கு தெரிந்து அறிந்து புரிந்து செல்லுங்கள்.

 

மேலும் விவரங்களுக்கு கீழுள்ள வீடியோவை பாருங்கள்

v

 

3. Spitball:

நிறுவனத்தைப் பற்றி கண்டிப்பாக உங்களுக்கு தெரிந்திருக்கும். 2018 மற்றும் 17 சமயங்களில் ஜியோவின் வரவேற்பின் மூலமாக இந்தியர்கள் பல நபர்கள் இந்த இணையதளத்தை பிரத்தியேகமாக கருதிக் கொண்டிருந்தனர் அப்போது சமயத்தில் spitball ஒரு ஆரம்ப கட்ட நிலையில் இருந்தது.

2018 சமயத்தில் spitball பீட்டா என்ற புனைப் பெயரும் இதற்கு கொடுக்கப்பட்டு ஸ்பீடா என்று அழைக்கப்பட்டது. அந்த சமயத்தில் இந்த இணையத்தளமானது மேம்பாட்டு செயல்பாடாக செய்து கொண்டிருந்தது ஆனால் அப்பக்கூட சம்பாதிக்கும் வகையில் அந்த இணையதளத்தை மாற்றி வைத்திருந்தார்கள். எப்படி அந்த சமயத்தில் நாங்கள் அங்கு சம்பாதித்தும் என்று கேட்டீர்கள் என்றால் பொதுவாக அயல்நாட்டில் இருக்கிற மாணவர்கள் அவர்களது பள்ளி படிப்பிற்கு தேவையான கேள்விகளுக்கான பதில் தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கும் சமயத்தில் இந்த இணையதளத்தை பயன்படுத்திய அவர்கள் சிறிது பணம் செலுத்தினால் அவர்களது கேள்வியானது இந்த இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் இங்கு என்னை மாதிரி உங்களை மாதிரியான நபர்கள் அவர்களுக்கு பதில் அளித்து அவர்கள் இந்த கேள்விக்கு இவ்வளவு பணம் தரப்படும் நீங்கள் பதில் கூறினால் என்று நியமிக்கப்பட்ட பணத்தின் அளவை நீங்கள் பெற்றுக்கொள்ளலாம் இப்படிதான் ஆரம்ப கட்ட நிலையில் இந்த இணையதளம் பார்வையாளர்களை தனது இணையதளத்தில் ஈர்த்தது ஆனால் ஒரு சில சமயத்திற்கு பிறகு இப்படிப்பட்ட சேவையை முழுமையாக நிறுத்திவிட்டனர். தற்போது இந்த இணையத்தளமானது ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை இணைக்கக் கூடிய தளமாக செயல்படுகிறது ஆனால் இதற்கு முன்னால் இருந்த செயல்பாட்டு முறை இப்போது இந்த இணையதளம் செயல்படுவதில்லை அதற்கு பதில் ஒரு ஆசிரியராக நீங்கள் ஏதோ ஒரு பாடத்தில் மிகவும் வல்லுனராக இருந்தால் நீங்கள் அதை உங்கள் மாணவர்களுக்கு சொல்லித் தந்து அந்த மாணவர்கள் வாயிலாக நீங்கள் பணத்தைப் பெறும் வகையில் இந்த இணையதளம் மாற்றி அமைக்கப்பட்டு விட்டது.

மிக சுலபமாக ஒரு தன்னிச்சையான ஆசிரியர் வீட்டில் இருந்தபடியே மாணவர்களுக்கு பாடம் எடுத்து சம்பாதிக்க இந்த இணையதளம் ஏதுவானது அதே சமயம் இங்கு நீங்கள் வேலை செய்ய வேண்டும் அது ஆசிரியராக இருந்தாலும் சரி மாணவராக இருந்தாலும் சரி நீங்கள் கண்டிப்பாக நல்ல இன்டர்நெட் கனெக்சன் வைத்திருக்க வேண்டும் கணினியும் மற்றும் வெப்கேம் சிறப்பாக செயல்படும் வகையில் வைத்திருக்கவேண்டும் இதெல்லாம் போக ஆங்கிலம் தெரிந்த நபர்களாக இருக்க வேண்டும் தமிழ் மற்றும் ஹிந்தி இன்னும் என்னென்ன இந்தியாவில் பேசப்படும் மொழிகள் ஆக இருக்கிறதோ அதற்கான ஆசிரியர் ஆக நீங்கள் இருந்தால் கண்டிப்பாக உங்களுக்கு இங்கு வேலை கிடைக்குமா என்பது சந்தேகம்.

நீங்கள் பணம் சம்பாதிக்க இந்த இணையத்தளம் ஏதுவானது ஆனால் ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டும் குறிப்பிட்ட பாடத்தில் மிக வலுவாக இருக்க வேண்டும் ஆகையால் நீங்கள் இந்த இணையதளத்தை தேர்வு செய்து சம்பாதிக்கும் நோக்கத்தில் வந்தால் நீங்கள் ஆசிரியராக தான் இருக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு கீழுள்ள வீடியோவை பாருங்கள்

v

4. Appen:

இன்றைய காலகட்டத்தில் வீட்டிலிருந்தபடியே ஒரு நிறுவனத்தில் வேலை செய்வது போன்ற வேலையை பல நபர்கள் எதிர்பார்க்கிறார்கள் அப்படிப்பட்ட நபர்களுக்காக உருவாக்கப்பட்டதுதான் Appen, இந்த நிறுவனமானது நமக்கு பல வகையான வேலைகளை கொடுத்துக்கொண்டு இருக்கிறது. 1996இல் ஆஸ்திரேலியாவில் இந்த இணைய தளத்திற்கான நிறுவனம் தொடங்கப்பட்டது தற்போதைய காலகட்டத்தில் இணையதளத்தில் அடி எடுத்து வைத்து இணையதள வாயிலாக எவ்வளவு தொழிலாளர்களை ஒருங்கிணைத்து இந்த நிறுவனத்திற்கான வேலைகளை கொடுத்து வருகின்றன.

இன்றைய சூழ்நிலையில் அமேசான் மைக்ரோசாப்ட் போன்ற பெரிய பெரிய நிறுவனங்களுடன் appen தொழில் ரீதியான உறவு வைத்திருக்கிறார்கள், இது மட்டுமே நமக்கு போதுமே இந்த நிறுவனம் எவ்வளவு நல்ல நிறுவனம் என்று தெரிந்து கொள்வதற்கு.

appen நிறுவனத்தின் பங்கு பங்கு சந்தையில் பங்கு இடப்பட்டுள்ளது அந்த அளவிற்கு லாபகரமான செயல்முறையில் இந்த நிறுவனம் செயல்பட்டு கொண்டிருக்கிறது இவர்களுடன் நீங்களும் இணைந்து வேலை செய்ய முடியும். என்னென்ன வேலை எங்கு கிடைக்கும் என்று கேட்டீர்கள் என்றால் உங்களுக்கு பல வகையான வேலைகள் கொடுக்கப்படுகிறது உதாரணத்திற்கு உங்கள் 2, 3 மொழிகள் தெரியும் என்றாள் அதற்காக மொழிபெயர்ப்பாளர் வேலையை நீங்கள் பெற்றுக்கொள்ளமுடியும், மற்றொன்று இந்த நிறுவனத்தில் அவ்வப்போது ஏதாவது ப்ராஜெக்ட் நடக்கும் அந்த ப்ராஜெக்ட் சம்பந்தப்பட்ட டேட்டாக்களை இணையதளத்தில் இருந்து ஒருங்கிணைத்து இவர்களுக்கு கொடுக்கவேண்டும் அப்படிப்பட்ட டேட்டா கலெக்டிங் வேலையை கூட உங்களுக்கு கொடுக்கலாம். இதுபோன்று எவ்வளவோ வேலைகள் இந்த நிறுவனத்தின் வாயிலாக பல நபர்கள் பெறுகிறார்கள் இதில் சிறப்பம்சம் என்னவென்றால் நீங்கள் இங்கு கொடுக்கக்கூடிய ஒரு சில வேலைகளை உங்கள் செல்போனிலேயே செய்ய முடியும். ஆனால் கணினி வைத்திருந்தார்கள் என்றால் உங்களுக்கு இன்னும் எளிதாகிவிடும். இருப்பினும் எனது விசாரணையில் எவ்வளவு நபர்கள் இந்த இணையதளத்தை வெறும் மொபைலை கொண்டு பயன்படுத்தியே சம்பாதித்து வருகின்றன.

ஆனால் இந்த நிறுவனத்தில் வேலை செய்ய உங்களுக்கு 18 வயது ஆகியிருக்க வேண்டும் அதற்கு குறைவு என்றால் உங்களை சேர்த்துக்கொள்ள மாட்டார்கள்.

குறைந்த பட்சம் மாதத்திற்கு நீங்கள் 3000 முதல் 10000 வரை எதிர்பார்க்கலாம் இந்த இணையதளத்தின் மூலமாக.

மேலும் விவரங்களுக்கு கீழுள்ள வீடியோவை பாருங்கள்

v

 

5. Teeshopper:

இன்றைய காலகட்டத்தில் நாம் வீட்டிலிருந்தபடியே நமது கிரியேட்டிவிட்டி திறனை பயன்படுத்தி சம்பாதிப்பதற்கு எவ்வளவோ வழிகள் இருக்கிறது அதில் ஒன்றுதான் டீசர் டிசைனிங். பொதுவாக டிசைனிங் என்பது நமது கிரியேட்டிவிட்டியை மூலதனமாக வைத்து செயல்படுத்தப்படும் ஒரு அங்கம்தான். இன்றைய சூழ்நிலையில் நீங்கள் ஒரு சிறந்த கிரியேட்டிவிட்டி பேஸ் தளத்தை தேர்வு செய்ய விரும்பினால் அதற்கு டி ஷர்ட் டிசைன் ஒரு சிறந்த தளமாக கருதலாம்.

இதற்காகவே இணையத்தளங்கள் தற்போதைய சூழ்நிலையில் பெருகி வந்துவிட்டது. ஆனால் பெருகி வந்த இந்த நிறுவனத்தில் பல நிறுவனங்கள் அயல்நாட்டு சேர்ந்த நிறுவனமாக இருக்கிறது. இப்போது பிரச்சனை எப்படி மாறும் என்றால் அயல் நாட்டை சேர்ந்த நிறுவனத்தின் டிசைன் மூலமாக உருவாக்கப்பட்ட டி-ஷர்ட்டை நாம் லாபம் எடுக்க விரும்பினால் அந்த டீ சர்ட் இருக்கு ஒரு விலை நிர்ணயிக்கப்பட்டு இருக்கும் அந்த விலைக்கு மேல் வரக்கூடிய பணத்தை தான் நாம லாபமாக கருதமுடியும் பிரச்சனை என்னவென்றால் அந்த டிஷர்ட் இருக்கு வைத்த லாபம் நிறுவனத்தின் விலையை விட குறைவாக இருந்தாலும் நிறுவனத்தின் விலை அந்த டீசர்ட் இருக்கு அதிகமாக இருக்கும். ஆகையால் அயல் நாட்டு நிறுவனத்தின் டிசைன் வெப்சைட் மூலமாக நீங்கள் டீஸர் டிசைனிங் வேலையை செய்ய போனால் உங்களுக்கு கிடைக்கும் பலன் யாருமே உங்களது டீ-சர்ட்டை வாங்க மாட்டார்கள் என்பதுதான் ஆகையால் நீங்கள் இந்தியாவை சேர்ந்த இணைய தளத்தில் இணைந்து இந்த வேலையை செய்தால் தான் உங்களுக்கு லாபம் கிடைக்க வாய்ப்புகள் அதிகரிக்கும். இந்தியர்களுக்காக நீங்கள் உருவாக்கினால் இந்தியாவை சேர்ந்த நிறுவனத்திடம் இணைந்து கொள்வதே நல்லது.

teeshopper எனக்கூறப்படும் நிறுவனமானது இந்தியாவை சேர்ந்ததுதான் இவர்கள் வைக்கும் டீசர்ட் இன் முதன்மை விலை மிகவும் குறைவு அதற்கு மேல் நீங்கள் வைத்து விற்கும் விலை உங்களுக்கான லாபம் இவர்களது இணையதளத்தில் எப்படி இணைந்து சம்பாதிக்க வேண்டும் என்பதற்கான முழு விளக்கத்துடன் வீடியோ நமது சேனலில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது உங்களுக்கு வீடு கிடைத்து விடும் கண்டிப்பாக பாருங்கள்.

இப்போது உங்களுக்கு சிறந்த நிறுவனம் எதுவென்றும் தெரிந்துவிட்டது எப்படி அங்கு இணைவது என்பதும் தெரிந்துவிட்டது ஆனால் எப்படி நமது டிசைன்களை விற்பது என்று நீங்கள் யோசிக்கலாம் அதற்கு ஒரு நல்ல வழி என்றால் இன்றைய காலகட்டத்தில் முகத்தை சொல்லலாம் முகமானது நமக்கான ஒரு பக்கத்தை உருவாக்கி கொள்ளலாம் நண்பர்களை அதில் இணைத்துக் கொள்ளலாம் இது காலப்போக்கில் நீங்கள் எந்த இடத்தை நோக்கிச் செல்கிறதோ அந்த இடத்தின் அளவை பொருத்து அங்கிருக்கும் பயனர்களை உங்கள் முகத்தின் பக்கம் இழுத்து விடும் இதன்மூலம் உங்களுக்கான பின்தொடர்பவர்கள் அதிகமாகி விடுவார்கள். பிறகு உங்களது பொருள்களான இந்த நிறுவனத்தினால் உருவாக்கப்பட்ட டி-ஷர்ட்டை அந்த பக்கத்தில் பகிருங்கள் கண்டிப்பாக ஒரு கட்டத்திற்கு மேல் தினசரி மக்கள் வாங்கும் அளவு அதிகரித்துவிடும் சில சமயங்களில் திருவிழா போன்ற காலகட்டத்தில் நல்ல ஒரு லாபத்தை நீங்கள் இந்த தொழில் மூலம் ஈட்டலாம்.

மேலும் விவரங்களுக்கு கீழுள்ள வீடியோவை பாருங்கள்

v

Admin

My Website Motivation is Easy to Understand, Tech in Tamil, and Get Latest Tech Updates in Tamil, We Do Tips and also Innovation, I Wanted Each And Every Individual Whoever Is Interested In Technology To Be Able To Understand It In The Easiest Possible Way, Thanks.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *